ஜெயாவுடன் பா.ஜ.க தலைவர் சந்திப்பு: கூட்டணி உறுதி
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என நேற்று சூசகமாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்குமாலை அணிவித்து அதிமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் ஜெயலலிதா.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசினார். அப்போது, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் விலகிஇருப்பதாக சொன்னீர்களே. அந்த நிலையில் இன்னும் நீங்கள் உறுதியாக இருக்கீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அரசியல் என்றாலே மாற்றங்களும், விட்டுக் கொடுத்தலும் தானே என்று பதில் தந்தார்.
பிரதமர் வாஜ்பாய் அல்லது துணைப் பிரதமர் அத்வானி ஆகியோர் உங்களுடன் கூட்டணி குறித்துப் பேசினார்களா என்றுகேட்டதற்கு, அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த ஜெயலலிதா, கூட்டணி விஷயத்தில் மேற்கொண்டு ஏதாவது தகவல் இருந்தால்அதை நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன். இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை, இப்போது சொல்வதற்கு ஏதுமில்லை என்றுகூறிவிட்டுச் சென்றார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி வரலாம் என்பதையே ஜெயலலிதா இவ்வாறு மறைமுகமாக சுட்டிக் காட்டியதாக அங்கிருந்த அதிமுகநிர்வாகிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர்,
இதையடுத்து போயஸ் கார்டன் திரும்பிய ஜெயலலிதாவை, வில்லன் நடிகர் நம்பியாரின் மகனும், பா.ஜ.க. தேசியக் கமிட்டிஉறுப்பினருமான சுகுமாறன் நம்பியார் இன்று பகலில் சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான நம்பியார் மூலம் தான் கடந்த முறை அதிமுக-பா.ஜ.க. கூட்டணி உருவானது. இந் நிலையில்இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதையே காட்டுகிறது.
கொளப்பாக்கத்தில் நடந்து வரும் அதிமுகவினருடனான நேர்காணலில் முதல் நாள் 33 இடங்களில் போட்டி, 7 சீட் கூட்டணிகட்சிக்கு என்றார் ஜெயலலிதா. அடுத்த நாள் கூட்டணி எல்லாம் கிடையாது. நாம் தனித்து நிற்போம் என்றார்.
நேற்று 100 சதவீதம் நம்மவர்களே ஜெயிப்போம் என்றார். இன்று அரசியலில் மாற்றங்கள் சஜகம் தானே என தத்துவார்த்தமாகபேசியதோடு பா.ஜ.க. மூத்த தலைவரையும் சந்தித்துள்ளார். இதனால் அதிமுகவினரும் அவர்களுக்கு இணையாக தமிழக பா.ஜ.கதலைவர்களும் தலை சுற்றிப் போய் குழம்பித் தவித்து வந்தனர்.
இந் நிலையில் இன்று காலை பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன், இதுவரை அதிமுக தரப்பில் இருந்து எந்தத்தகவலும் வராவிட்டாலும் நாங்கள் கவலைப்படவில்லை, நாங்களும் அவர்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. ஆனால்,நிச்சயமாகக் கூட்டணி உருவாகும், உரிய நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எங்கள் மத்தியத் தலைவர்கள் சந்தித்து பேசுவர்என்றார்.
அவர் சொன்னது போல சுகுமாறன் நம்பியார் சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானி தரப்பில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.ஜெயலலிதாவிடம் பேசும் வகையில் பேசி 5 சீட்களையாவது அதிமுகவிடம் இருந்து அத்வானி வாங்கித் தந்துவிடுவார் எனபா.ஜ.கவினர் கூறுகின்றனர்.
மார்கழி மாதம் நடந்து வந்ததால் தான் ஜோதிடப்படி முக்கிய முடிவெதையும் ஜெயலலிதா எடுக்காமல் உள்ளார் என்று கூறி வந்தபா.ஜ.கவினர் தை மாதம் பிறந்துவிட்டதால் தங்களுக்கும் ஒரு வழி பிறக்கும் என்றனர். இப்போது ஒரு வழி பிறந்துவிட்டதாகவேதெரிகிறது.
எப்படியாவது கோயம்புத்தூர், நாகர்கோவில், நீலகிரி, புதுக்கோட்டை, தென் சென்னை ஆகிய தொகுதிகளை அதிமுகவிடம்கேட்டு வாங்கிவிடுவது என்ற தீவிரத்தில் உள்ளனர் பா.ஜ.கவினர். ஆனால், மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மீது தொடர்ந்துகோபத்திலேயே உள்ள ஜெயலலிதா, அந்தத் தொகுதியைத் தர மாட்டார் என்று புதுக்கோட்டை பகுதி அதிமுகவினர்திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
இன்று ஜெயலலிதாவைச் சந்தித்த மலையாளியான சுகுமாறன் நம்பியார், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவையடுத்து திருச்சிமக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications