சென்னை குடிநீர் பஞ்சம்: ரூ. 700 கோடி கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்
சென்னை:
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 700 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனைக் கட்சி அம் மாநில வறட்சி நிவாரண நிதிக்கு ரூ. 2,000 கோடிவழங்க வேண்டும் என்று நெருக்குதல் தந்து வருகிறது. கூட்டணியைக் காப்பாற்ற நிதியை வழங்க வேண்டிய நிலையில் மத்தியஅரசு உள்ளது.
இதே ஸ்டைலில் இப்போது முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்துள்ளார். பா.ஜ.கவுடன் கூட்டணிஅமையலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசின் நிதியைக்கோரியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:
சென்னையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. இதனைச் சமாளிக்க தேசியஅவசரகால நிவாரண நிதியில் இருந்து ரூ. 700 கோடியை தமிழகத்துக்குத் தர வேண்டும்.
சென்னையைக் காப்பாற்ற எங்களிடம் பணமில்லை. வேறு வழியும் தெரியவில்லை. இதனால், இதனை ஒரு தேசியபிரச்சனையாகக் கருதி உடனே நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications