ஓய்வு பெறுகிறார் தனி நீதிபதி: "அந்தரத்தில்" ஸ்பிக் ஊழல் வழக்கு
சென்னை:
சென்னை தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் விசாரித்து வரும் ஸ்பிக்ஊழல் வழக்கின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக திமுகஆட்சிக்காலத்தில் 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அவற்றில் இரண்டு கலைக்கப்பட்டன.தற்போது ஒரு நீதிமன்றம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் நீதிபதியாக ராஜமாணிக்கம் உள்ளார்.
அவர் முன் தற்போது 2 முக்கிய வழக்குகள் உள்ளன. அதில் ஒன்று ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு. இந்த வழக்கின் விசாரணை கடந்தவாரம் முடிவடைந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை அறிவிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதால் இதில்தீர்ப்பு கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று ரூ. 1.19 கோடி இலவச செருப்பு ஊழல் வழக்கு. இதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் மீது வழக்குநடந்து வருகிறது.
இந் நிலையில் நீதிபதி ராஜமாணிக்கம் வருகிற 31ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளதால், ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற தடை இருப்பதால் தீர்ப்பு கூறப்படவில்லை.
தான் ஓய்வு பெறவுள்ளதால், தடையை நீக்குமாறு கோரி நீதிபதி ராஜமாணிக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு31ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அதில் தடை விலக்கப்பட்டால், ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும். இல்லாவிட்டால், நீதிபதியின் ஓய்வுக்குப் பின்இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே இருக்கும். வேறு நீதிபதி நியமிக்கப்பட்டால், மீண்டும் முழுமாைக விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதனால் ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கின் நிலையே கேள்விக்குறியாகியுள்ளது. நீதிபதி ராஜமாணிக்கம் ஓய்வு பெறுவதற்குள் இந்தவழக்கு முடிவுக்கு வருமா அல்லது தொடர்ந்து நிலுவையில் இருக்குமா என்பது உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications