திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை, கோவிலில் சிறப்பு பூஜை
ஈரோடு:
உலகப் பொதுமறையாம் திருக்குறளை அருளிய தெய்வப் புலவன் திருவள்ளுவரின் பிறந்த நாள் நேற்று தமிழகத்தில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் கோவிலில்சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இந் நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி அரசு விதித்திருந்த தடையையும் மீறி ரகசியமாக மது விற்பனை செய்தஹோட்டல்கள் மீது போலீஸார் திடீர் சோதனை நடத்தி ஹோட்டல் மேலாளர்களைக் கைது செய்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார், செம்மலை ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் அரசுத் தடையையும் மீறி ஈரோட்டில் உள்ள பல ஹோட்டல்களில் மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு ஹோட்டல்களின் பார்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 6ஹோட்டல்களில் மது விற்பனை நடந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டல்களின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் வருவதைப் பார்த்ததும்மது அருந்த வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பார்களில் இருந்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள், வசூலான பணம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications