டெல்லியில் ஸ்டாலின்: சோனியாவுடன் இன்று சந்திப்பு
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்றுடெல்லி சென்றனர்.
அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது. அனைவராலும் கைவிடப்பட்டு விட்ட பா.ஜ.கவும் வேறு வழியின்றி தனித்துநிற்கவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் திமுக, அடுத்து தொகுதிப் பங்கீடுதொடர்பான பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது. இதற்காக திமுக தலைவர்கருணாநிதியின் தூதர்களாக ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் இன்று டெல்லி சென்றனர்.
சோனியாவை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதியின் கருத்துக்களைத் தெரிவித்து விட்டு சோனியாவின்கருத்தையும் கேட்கவுள்ளார்கள்.
இந்த பயணத்தின் மூலம் திமுகவில் ஸ்டாலினின் அதிகாரத்தை மேலும் ஒரு படி உயர்ந்தியுள்ளார் கருணாநிதி. இளைஞர் அணிசெயலாளராகவே நீண்டகாலம் இருந்து வந்த ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தான் துணைப் பொதுச் செயலாளர்அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
இந் நிலையில் தற்போது தேசிய அளவில் திமுக சார்பில் பேச டெல்லியில் காலடி எடுத்து வைத்துள்ளார். தேசிய அளவில்திமுகவின் பிரதிநிதியாக ஸ்டாலின் செல்வது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என்று கருணாநிதியை வற்புறுத்தியதும் ஸ்டாலின்தான்என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். தற்போது காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் அவரே பேச்சு நடத்தஆரம்பித்துள்ளார்.
திமுகவில் ஸ்டாலினின் நிலையை பலமாக்கிக் கொள்ளவும், தனது அரசியல் வாரிசாக ஸ்டாலினுக்கு முடி சூட்டவும் இந்தத்தேர்தலை கருணாநிதி ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
ஸ்டாலின், சோனியா சந்திப்புக்குப் பின் சென்னை வரும் சோனியா, கருணாநிதியும் சந்திப்பார்.
இன்று காலை டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாலை தான்சோனியா காந்தியை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications