ஓட்டு வேட்டை: மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச வேட்டி, சேலை
சென்னை:
நிலமற்ற ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்போருக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த பின் ஒட்டுமொத்தமாக இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை நிறுத்திய ஜெயலலிதா,தேர்தல் வருவதையொட்டி இந்தப் பொங்கல் முதல் இத் திட்டத்தை மீண்டும் தொடங்கினார்.
இந் நிலையில் இத் திட்டத்தின் கீழ் மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவசங்கள் வழங்க முன வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ரூ. 120 கோடி செலவில் நிலமற்ற ஏழைவிவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்போருக்கு பொங்கல் தினத்தன்று இலவச வேட்டி, சேலைவழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ரேசனிவ் கூப்பன் முறையில் அரிசி பெறுவோர்அனைவருக்கும் இந்தத் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ. 50 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மதுரையில் மறியல்: இதற்கிடையே, தகுதி வாய்ந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைவழங்க அதிகாரிகள் மறுப்பதாக கூறி மதுரை, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானபெண்களும், ஆண்களும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகமலை புதுக்கோட்டை, மேலக் குயில்குடி, கீழக்குயில் குடி, வடிவேல்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார்50,000 பேர் இலவச வேட்டி, சேலை பெறத் தகுதியானவர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். ஆனால்வெறும் 400 பேருக்கு மட்டுமே வேட்டி, சேலை தருவோம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொங்கல் தினத்தன்றும் இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் இன்னும் நிவாரணம்கிடைக்காததால், இன்றும் சுமார் ஆயிரம் பேர் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications