நான் பிரதமராக கனவு காணவில்லை: சோவுக்கு ஜெ. பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமராகும் கனவில் நான் இல்லை. தமிழகத்தின் முதல்வராக இருந்து மாநிலத்துக்கு தொண்டு செய்வதையேபெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே 40 தொகுதிகளிலும் வெல்லோம், மத்தியில் நாம் நினைக்கும் ஆட்சியை அமைப்போம்என்று பேசி வந்தார் ஜெயலலிதா. இதையடுத்து வருங்காலப் பிரதமர் ஜெயலலிதா என்று ரத்தத்தின் ரத்தங்கள்ஜெயலலிதாவைப் பார்த்தபோதெல்லாம் கோஷமிட்டார்கள். அதை புன்முறுவலோடு ஏற்று வந்தார் ஜெயலலிதா.

பெரும்பாலான கூட்டங்களில் பேசிய அமைச்சர்களும் வருங்கால பிரதமர் ஜெயலலிதா என்று கூவினார்கள்.

இந் நிலையில் 3 வட மாநிலங்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் தமிழகத்தில் திமுக அமைத்தவலுவான கூட்டணி காரணமாக ஜெயலலிதாவின் கனவு பலிக்காமல் போய்விட வாய்ப்பிருப்பதாக துக்ளக்ஆசிரியர் சோ கூறியிருந்தார்.

தனது பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் பேசிய அவர், ஜெயலலிதா சொப்பன சாஸ்திரத்தில் கால்குலேஷன்போட்டு வருவதாகக் கூறினார். இதையே ஒரு வட இந்தியப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழகம் மற்றும் புதுவையின் 40 எம்.பி தொகுதிகளை மட்டும் மனதில் வைத்து பிரதமராகி விடலாம் என்றுஜெயலலிதா கனவு காண்கிறார். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை. பா.ஜ.கவைச் சேர்ந்த வசுந்தரராஜேசிந்தியா, உமாபாரதி ஆகியோர் முதல்வர்களாகத் தேர்வு பெற்றதற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை.அவர் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார் என்று சோ அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டிக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்றும்கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமராகி விட வேண்டும் என்ற கனவு எனக்குஎப்போதுமே இருந்ததில்லை. அந்த மாதிரியான திட்டத்திலும் நான் இல்லை (பிறகு ஏன் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்களை அவ்வாறு பேச விட்டார் என்று தெரியவில்லை)

தமிழகத்தின் முதல்வராக இருந்தாலே எனக்குப் போதும், அதுதான் எனக்கு பெருமையும் கூட. நாடாளுமன்றத்தில்தமிழக எம்.பிக்களின் குரல் ஒரே குரலாக, அதிலும் அதிமுகவின் குரலாக ஒலித்தால் மட்டுமே தமிழகத்தின்உரிமைகளை முழுமையாகப் பெற முடியும் என்ற எண்ணத்தில்தான், அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சஇடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.

பா.ஜ.க. சார்பில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல்வராகப் பதவியேற்ற வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும்உமாபாரதிக்கு நான் வாழ்த்துத் தெவித்து கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அது பத்திரிகைகளில்வெளியாகவில்லை. அது என் தவறு அல்ல என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

துணைப் பிரதமர் பதவி கேட்கிறார்?

அதே நேரத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்றால், தன்னைத் துணைப் பிரதமருக்கானவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள்வருகின்றன.

இதற்கு இதுவரை பா.ஜ.க. தலைமையிடம் இருந்து சரியான பதில் வராமல் இருப்பதாலேயே, கூட்டணி குறித்தமுடிவை ஜெயலலிதா அறிவிக்காமல் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த முறை பா.ஜ.க. வென்றாலும் கூட வாஜ்பாயே மீண்டும் பிரதமராக்கப்படுவாரா என்பதேசந்தேகத்துக்குரியதாய் உள்ளது. கூட்டணி வெல்லும் வரை வாஜ்பாயை முன்னிறுத்திவிட்டு, தேர்தலுக்குப் பின்துணைப் பிரதமர் அத்வானியையே பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆகியவற்றின் பின்னணியுடன் அத்வானி கோஷ்டி செய்யஆரம்பித்துவிட்டதாக டெல்லியில் பேச்சு நிலவுகிறது.

ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கூட வாஜ்பாய் தரப்புக்கும் அத்வானிதரப்புக்கும் பெரும் மோதல் நடந்து முடிந்துள்ளது.

அத்வானி கோஷ்டியின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க வாஜ்பாய் மறுத்ததால் இந்தக் கூட்டத்தின் பல்வேறுநிகழ்ச்சிகளை அத்வானி புறக்கணித்தார். இதனால் கூட்டத்தின் கடைசி நாள் அதைப் புறக்கணிக்க பிரதமர்வாஜ்பாய் முடிவு செய்தார். கடைசியில் இருவரையும் கையில், காலில் விழுந்து சமாதானப்படுத்திமேடையேற்றினார்கள் இரண்டாம் மட்ட பா.ஜ.க. தலைவர்கள்.

இந் நிலையில் அத்வானியே அடுத்த பிரதமராவார் என்று நிச்சயமாக நம்பும் ஜெயலலிதா, தன்னைத் துணைப்பிரதமராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. தரப்பில் இருந்து துணைப்பிரதமர் பதவிக்கான உறுதிமொழி தரப்படும் பட்சத்தில் கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என்று தெரிகிறது.

நானே அடுத்த துணைப் பிரதமர் என்று சொல்லி தமிழக வாக்காளர்களைச் சந்தித்தால், திமுக அமைத்துள்ளவலுவான கூட்டணியை மண் கவ்வச் செய்துவிட முடியும் என்றும் ஜெயலலிதா நம்புவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+