மதிமுகவுக்கு எந்தெந்த இடங்கள்?: கருணாநிதி முடிவு செய்வார்"
சென்னை:
மதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதிமுடிவு செய்வார் என்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப்பின்னர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில்போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
மேலும், மதிமுகவுக்கு எத்தனை சீட் கொடுப்பது என்ற முடிவை திமுக தலைவர் கருணாநிதியிடமே விட்டு விட முடிவுசெய்துள்ளோம். கட்சித் தலைவர் வைகோவுடன் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில், திமுக தலைவர்கருணாநிதியே அனைத்தையும் மேற்கொள்வார். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைகருணாநிதியை முடிவு செய்வார்.
இம்மாதம் 25ம் தேதி வாக்கில் வைகோ ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கிறோம். வெளியே வந்தபிறகு திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது தொகுதிகள் பங்கீடுஇறுதி செய்யப்படும் என்றார் கணேசன்.
தேர்தல் வேலைகளை நடத்துவது மற்றும் தேர்தல் நிதி திரட்டுவது தொடர்பான வேலைகளை ஒருங்கிணைக்க,எல்.கணேடன், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் துரை, திருப்பூர் துரைசாமி ஆகிய 5 பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications