தேர்தலில் போட்டியிடுவேன்: நடராஜன் சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சசிகலாவின் கணவரான நடராஜன் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நடராஜன், சமீபத்தில் ஜனனி கஞ்சா வழக்கின்போது லைம்லைட்டுக்கு வந்தார்.

இந் நிலையில் தஞ்சையில் தமிழர் கலை இலக்கிய விழாவில் பேசிய நடராஜன்,

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்களில் நானும் ஒருவன். கருணாநிதி முதல்வராகஇருந்தபோது தமிழக அரசின் பி.ஆர்.ஓக்களின் லிஸ்டுக்காக 60 பேரின் பெயர்களை எழுதித் தந்தேன். அதில் என்பெயரை நான் சேர்க்கவில்லை. கருணாநிதி தான் சேர்த்தார். என்னை பி.ஆர்.ஓ. ஆக்கினார்.

பின்னர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஜெயலலிதாவை முன்னிருத்தி பாடுபட்டேன்.13 ஆண்டுகளுக்கு முன் யார் எம்.எல்.ஏ, யார் அமைச்சர் என ஜெயலலிதா சொல்லி நான் எழுதும்போது கூட எனதுபெயரை எங்காவது ஓரிடத்தில் சேர்க்க நானும் விரும்பியதில்லை. அவரும் கேட்டதில்லை.

இப்போது எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும்பல அரசு வேலைகள் தொடர்பாக என்னிடம் பலரும் சிபாரிசுக்குக்கு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி என் ஆலோசனைகளைக் கேட்கிறார். சமீபத்தில் கருணாநிதியைசந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் கூட, நடராஜன் என்னநினைப்பாரோ என்று தயங்கியதாகக் கேள்விப்பட்டேன். இதைப் போல பல தேசிய அரசியல் தலைவர்களும் என்யோசனைகளைக் கேட்கிறார்கள்.

தெளிவாகவே சொல்லி விடுகிறேன். எனக்காக எதுவும் செய்யப் போவதில்லை. ஆனால், தமிழுக்காக, தமிழ்மக்களுக்காக, தமிழகத்துக்காக வரும் தேர்தலில் ராமநாதபுரம், திருநெல்வேலி, பெரியகுளம் அல்லது ஏதாவதுஒரு தொகுதியில் நின்று தேசிய அரசியலுக்கு செல்லப் போகிறேன். யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும்கவலையில்லை.

என்னை டெல்லிக்கு அனுப்புவது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

ஜனனி விஷயத்தில் தமிழக அரசால் மிகவும் டார்ச்சர் செய்யப்பட்டு வருவதாலேயே, அதிமுக தலைமையை மிரட்டிநடராஜன் இவ்வாறு கரடி விடுவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+