நாங்கள் ஓநாயா, தந்திர நரிகளா?: ஜெ.வுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை:
தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் ஜெயலலிதா புழுதி வாரித் தூற்றுவதாக பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தன்னை எதிர்ப்போரைவஞ்சக ஓநாய்கள், தந்திர நரிகள், கருகும் வைக்கோல் பொம்மைகள் என்பன போன்ற விமர்சனங்கள் அதில்மலிந்து கிடக்கின்றன. இது நாகரீகமாகத் தெரியவில்லை.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற கட்சிகள் மீது அபாண்டமாக புகார்களைக் கூறுவதும், புழுதி வாரித்தூற்றுவதும் கண்டனத்துக்குரியது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக அமைச்சர்கள் தமிழகநலனை மறந்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
மற்ற மாநிலத்து முதல்வர்கள் அந்தந்த மாநிலத்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுகிறார்கள். பிரதமரைச்சந்திக்கச் செல்லும்போது உடன் அழைத்துச் செல்கிறார்கள். ஜெயலலிதா ஒருமுறையேனும் அவ்வாறுசெய்ததுண்டா? இது தொடர்பாக நாங்கள் அறிவுரை சொன்னபோதெல்லாம் அதிமுக தரப்பில் இருந்துவசைமொழிகள் பறந்து வந்தன.
பெறும்வரை பெறு, பெற்றபின் உறவை அறு என்ற ரீதியில் மத்திய அரசிலிருந்து நாங்கள் விலகியாதகக்கூறியுள்ளார். இப்போது எங்களைக் குறை கூறும் இவர், 1999ம் மத்திய அரசைக் கவிழ்த்தது எதற்காக?
சாராயக் கடைகளை அரசாங்கமே நடத்தி குடியைப் பரப்பி விட்டோம் என்று உங்கள் ஆட்சியின் சாதனைகளைச்சொல்லுங்கள். அவலங்களை நாங்கள் சொல்கிறோம்.
இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் தீர்ப்பு சொல்லட்டும். 40 தொகுதிகளிலும் ஆளும்கட்சியைத் தோற்கடிக்கமக்கள் தயாராகிவிட்டார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications