சொத்துக் குவிப்பு வழக்குகள்: ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து குவித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் மீது தமிழகத்தில் விசாரணை நியாயமாகநடத்தப்படாததால் அதை பெங்களூருக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.
வீரப்பன், காவிரி பிரச்சனையால் கர்நாடகம்- தமிழகம் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் பெங்களூரில் விசாரணைநடத்தினால் நேர்மையான முறையில் வழக்கு நடத்தப்படாது என்றும், பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் கூறிவழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு சமீபத்தில் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு ஜெயலலிதா வந்துசென்றபோது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய கர்நாடக அரசு, அது போலவே பெங்களூருக்கு வழக்குவிசாரணைக்காக வந்தாலும் பாதுகாப்பு தருவோம் என்று கூறியது.
மேலும் நேர்மையாக, நியாயமாக வழக்கை விசாரிப்போம் எனவும், நீதிமன்றத்தையும் அமைத்தாகிவிட்டதாகவும் தனது பதில்மனுவில் கூறியிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. கர்நாடகம்அளித்துள்ள பதிலுக்கு 2 வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அந்த நோட்டீசில் ஜெயலலிதாவுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications