அழகிரி பாஸ்போர்ட்டை முடக்க கோரி தமிழக அரசு மனு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிஅமெரிக்கா செல்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டும் என்றும்கோரி மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜபருல்லா கான் முன்பு ஆஜராகினர்.
அப்போது அரசு வழக்கறிஞர் கந்தசாமி நீதிபதியிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், மு.க.அழகிரி அமெரிக்காசெல்லப் போவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தா.கிருட்டிணன் கொலை வழக்கில்அவர் முக்கியக் குற்றவாளி. வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. இந் நிலையில் அவர் அமெரிக்கா சென்றால்விசாரணை பாதிக்கப்படும்.
எனவே அழகிரி அமெரிக்கா செல்ல தடை விதித்து அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து முடக்கி வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்து.
இதைத் தொடர்ந்து இந்த மனு மீது இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். வாதத்திற்குப் பின்னர் இதுதொடர்பான முடிவை வருகிற 21ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அழகிரி தற்போது ஜாமீனில் உள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் சமீபத்தில்தான் சென்னைஉயர் நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications