டிஸ்மிஸ்: 999 அரசு ஊழியர்களும் திங்கள்கிழமை மேல்முறையீடு
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்களும் வரும் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட்செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்கை விசாக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுஅமைக்கப்பட்டது.
இந்த குழுவின் விசாரணையின் இறுதியில் 999 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 230 பேர் எந்தவிததண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அபராதம், பதவியிறக்கம் ஆகிய தண்டனைகள்கொடுக்கப்பட்டன.
இந் நிலையில் டிஸ்மிஸ் ஆனவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றுஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இது குறித்து தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், 999 பேரையும்மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீக்க வேண்டும் என்றுகோரி நிதியமைச்சர் பொன்னையன் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
வரும் திங்கள்கிழமை வரை முதல்வரின் பதிலுக்காக காத்திருக்கப் போகிறோம். அதன் பிறகும் நிவாரணம்கிடைக்காவிடில் திங்கள்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 999 அரசு ஊழியர்களும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வார்கள் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications