செயற்கைக் கால்: மதானி கோரிக்கைக்கு பதில் தர அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானியின் ரிட் மனுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சிறைத்துறைத் தலைவர், கோவைமத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 50க்கும் மேற்பட்டோர்பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவரான அப்துல் நாசர்மதானி கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு மதானியின் வலது கால் விபத்து ஒன்றில் காயமடைந்து, அறுவைச் சிகிச்சை மூலம்துண்டிக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள லார்ட்ஸ் செயற்கைக் கால் மையத்தில் அவருக்குசெயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
செயற்கைக் காலின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்தான். செயற்கைக் கால் தனது ஆயுட்காலத்தைக் கடந்த நிலையில்1998ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது செயற்கைக் காலை மாற்றதிருவனந்தபுரம் செல்ல அனுமதிக்குமாறு மதானி கோரி வந்தார். ஆனால் கோவை நீதிமன்றங்களில் அவரதுகோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதானி சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். 23ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் அதில் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications