விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம்:
காணும் பொங்கல் தினத்தன்று விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே மது அருந்தி விட்டு கைகலப்பில் ஈடுபட்ட 5ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல் தினத்தன்று, விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சிஊழியர்கள் மது வாங்கி ஹாயாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையும்போட்டுள்ளனர்.
விழுப்புரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கையும் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், 5 நகராட்சி ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விழுப்புரம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் இருக்கிறார். இந்த நகராட்சியை இயங்கவிடாமல் அதிமுகவினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் நகராட்சி நிர்வாகம் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. இதன் காரணமாகவே நகராட்சி அலுவலகத்தில் இதுபோன்ற பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுவதாக விழுப்புரம் மக்கள் குமுறல் தெரிவிக்கிறார்கள்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications