ஜெயலலிதாவுடன் அத்வானி தொலைபேசியில் பேச்சு: கூட்டணி உறுதியாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசுக்கு உடனடியாக ரூ. 50 கோடி வழங்குவதாகமுதல்வர் ஜெயலலிதாவிடம் துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா வைத்துள்ள பிற கோரிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்தப்போவதாகவும் அத்வானி உறுதியளித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவைத்த கோரிக்கைகள் பட்டியல் தனக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அவை குறித்து ஆவண செய்வதாகவும்அத்வானி கூறியுள்ளார்.

இன்று ஜெயலலிதாவுடன் அத்வானி தொலைபேசியில் கூட்டணி குறித்து விவாதித்துவிட்டு, நிதி உதவி மற்றும் பிறகோரிக்கைகள் தொடர்பாக உறுதிமொழிகள் தந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து பா.ஜ.க. பேச்சு நடத்த முயன்றபோது மத்திய அரசுக்கு ஜெயலலிதா ஒரு கடிதம்எழுதினார். அதில், பருவமழை பொய்த்து விட்டதால், சென்னையில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கதேசிய இயற்கை சீற்ற நிவாரண நிதியிலிருந்து ரூ. 700 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.

இதுவரை அந்தக் கடிதத்துக்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், இன்று துணைப் பிரதமர்அத்வானி தொலைபேசி மூலம் முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு பேசினார்.

பா.ஜ.க. பிரமுகர் சுகுமாறன் நம்பியார் மூலமாக அத்வானிக்கு ஜெயலலிதா சொல்லி அனுப்பிய தகவல்கள் குறித்துஇருவரும் பேசினர். தன்னுடன் கூட்டணி வைக்க வேண்டுமானால், வாஜ்பாயை பிரதமராக முன் நிறுத்திதமிழகத்தில் பா.ஜ.க. பிரச்சாரம் செய்யக் கூடாது என்று நிபந்தனை குறித்தும் இருவரும் விவாதித்ததாகத்தெரிகிறது.

இதற்கு அத்வானி தரப்பில் இருந்து என்ன பதில் கிடைத்தது என்று தெரியவில்லை.

ஆனால், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று சென்னை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முதல் கட்டமாக ரூ. 50கோடி வழங்குவதாக அத்வானி உறுதியளித்துள்ளார். மேலும் சென்னை நகரப் குடிநீர்ப் பிரச்சனை குறித்து ஆராயநிபுணர் குழுவை சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரூ.50க்கும் அதிமான மதிப்பில் கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றமுன்னாள் சுற்றுசூழல்துறை அமைச்சர் பாலுவின் உத்தரவை உடனே ரத்து செய்யுமாறும் அத்வானியிடம்ஜெயலலிதா கோரிக்கை வைத்ததார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும்ஜெயலலிதாவுக்கு அத்வானி உறுதியளித்துள்ளார். இதனால் பாலு பிறப்பித்த உத்தரவு ரத்தாகலாம் என்றுதெரிகிறது.

பிரதமர் வாஜ்பாயை ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்தாலும் அத்வானி கோஷ்டி அவருடன் நட்பைபலப்படுத்துவதில் மிகத் தீவிரமாகவே உள்ளது.

அதிமுக பொதுக் குழு கூடுகிறது:

இந் நிலையில் வரும் பிப்ரவரி 3ம் தேதி கொளப்பாக்கத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவைமுதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.

அக் கூட்டத்தில் பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+