வறட்சி: சென்னைக்கு குடிநீர் வழங்க ஒருநாள் செலவு ரூ. 1 கோடி
சென்னை:
சென்னையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குடிநீர் தேவைக்காக ஒரு நாளைக்கு செலவிடப்பட்டு வந்த 80 லட்சம் ரூபாய், இனி 1 கோடி ரூபாயாகஉயர்த்தப்படுகிறது.
சென்னையின் வடமேற்குப் பகுதிளிலுள்ள கிணறுகளிலிருந்தும், சென்னைக்கு தெற்கே 220 கி.மீ. வரை குடிநீர்ஆதாரங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களிலிருந்தும் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலமே குடிநீர் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு பகுதியிலும் சின்டெக்ஸ் டேங்குகள் வைக்கப்பட்டு, லாரி நீர் அதில் நிரப்பப்பட்டு குடங்களில்வழங்கப்படுகிறது. இந் நிலையில் சென்னை நகரில் மேலும் 2,000 சின்டெக்ஸ் டேங்குகளை நிறுவவும்திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போது டேங்கர் லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 7,500 நடை குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. இது இனி10,000 நடையாகவும், கோடை காலத்தில் 13,000 நடையாகவும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கண்டலேறு நீர் வருகை:
இந் நிலையில் கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு நீர் வரத்து இன்று முதல் தொடங்கும் என்று ஆந்திராஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.8 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ள இந்த அணையிலிருந்து 2.4 டி.எம்.சிதண்ணீர் சென்னைக்குத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பம்ப் மூலம் அணை நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. நீர் தாழ்வான பகுதியிலிருந்து உயர்வான பகுதிக்குசெல்ல வேண்டியிருப்பதால், மீண்டும் நீர் அணைக்குள் செல்லத் தொடங்கியது. இதனையடுத்து தடுப்புச் சுவர்அமைக்கப்பட்டு, நீர் அனுப்பப்படுகிறது. இந்த நீர் பிப்ரவரி முதல் வாரம் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டைவந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications