தேர்தல் சலுகை: தமிழகத்தில் நிலவரி ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பருவமழை பொய்த்துவிட்டதால் இந்த ஆண்டும் நிலவரியை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்ததையடுத்து, கடும் வறட்சி நிலவி வருகிறது. அனைத்துஅணைகளிலும் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. தமிழகம் குறுவை, சம்பா, தாளடி, பிசான சாகுபடி நடக்கவில்லை.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற நிலவரி மற்றும் கிராமப்புற நிலவரி வசூலிக்கப்படுவது வழக்கம். வறட்சி காரணமாககடந்த ஆண்டு நிலவரி ரத்து செய்யப்பட்டது. அதே நிலை தொடர்ந்து நீடிப்பதால், இந்த ஆண்டும் நிலவரியை ரத்து செய்ய அரசுபரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கு அரசு சமர்ப்பித்த திட்டத்தை உலக வங்கி ஏற்று, ரூ.1,500 கோடிகடன் வழங்க முன்வந்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்த கடனைப் பெற தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+