அனைத்து அரசு மதுக்கடைகளில் பார் வசதி
கோவை:
அனைத்து அரசு மதுக்கடைகளில் பார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாஸ்மார்க் நிர்வாக ஆணையர் அய்யர் அரசு மதுக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை குறித்து மாவட்டமேலாளர்கள், கலால்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பார் வசதிஇல்லாததால் பீர் விற்பனை குறைந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.
இதனையடுத்து, தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் உடனடியாக பார் திறக்க அய்யர்உத்தரவிட்டார். பார் நடத்தத் தேவையான குளிர்சாதனப்பெட்டி, மேஜை, நாற்காலிகளை முதுநிலை மண்டலமேலாளருடன் ஆலோசனை செய்து மாவட்ட மேலாளர்கள் வாங்கவேண்டும்.
பாரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நொறுக்குத் தீனிகளை விற்பனைசெய்ய மாவட்ட மேலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தனியார் போலி மதுக்கடைகளை அகற்றும் பணியை கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், மதுக்கடைகளில் விற்பனையான சரக்குகள் மற்றும் இருப்பு குறித்து கணக்கெடுக்க 15கடைகளுக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதுவரை கோவை மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 110 கோடி ரூபாய்க்கு மது விற்பனைசெய்யப்பட்டதையடுத்து. கோவை மேலாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications