அதிமுக எம்.எல்.ஏ மீது புகார் கூறிய கவுன்சிலர் நீக்கம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் கூறி மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் சலசலப்பைஏற்படுத்திய அதிமுக கவுன்சிலர் போஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக கட்சிப் பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 62வது வார்டு அதிமுக உறுப்பினர் போஸ். இவர் சமீபத்தில் நடந்த மாநகராட்சிக்கூட்டத்தின்போது, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தன்னை கொலை செய்து விடுவதாகமிரட்டியதாக கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சக அதிமுக கவுன்சிலர்கள் போஸைத்தாக்கினர்.
இந் நிலையில் எம்.எல்.ஏ. மீது புகார் கூறிய போஸை கட்சியை விட்டு நீக்கி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராகவும்,முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சிக்கு அவப் பெயரும், களங்கம் உண்டாகும் வகையில் நடந்து கொண்டதாலும் போஸ்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
போஸ் இப்போது திமுக பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
