தனுஷுக்கு தடை நீங்கியது: படங்களில் நடிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை:
நடிகர் தனுஷ் புதுப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை நீதிமன்றம் நீக்கி விட்டது.அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.
பார்க்கர் பிரதர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ராகவா படத்தில் நடிக்க தனுஷ் புக் செய்யப்பட்டிருந்தார்.இதற்காக ரூ. 40 லட்சத்தில் ஆரம்பித்து ரூ. 90 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டது. ஆனால், ரூ. 3 கோடி வரைஎதிர்பார்த்த தனுஷின் தந்தை கஸ்தூரிராஜ், கதை சரியில்லை என்றும், தொழில்நுட்பக் கலைஞர்களும்பிடிக்கவில்லை என்றும் சொல்லி படத்தில் தனுஷ் நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து தனுஷ் எங்களது படத்தில் நடிக்காமல் வேறு படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிசென்னை நீதிமன்றத்தில் பார்க்கர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிபதி சோமசேகரன் நேற்று முன்தினம் வரை தனுஷ் புதிய படங்களில் நடிக்க தடை விதித்துஉத்தரவிட்டிருந்தார். இதனால் பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த அது ஒரு கனாக் காலம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தனுஷ் வீட்டில் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும் சேர்ந்து பேசிபிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமாறும், இதில் இரு தரப்பினருக்கும் நஷ்டம் ஏற்படுவதை தான்விரும்பவில்லை என்றும் நீதிபதி சோமசேகரன் யோசனை தெரிவித்தார்.
அதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தனுஷுக்கு விதித்திருந்த தடையை நீதிபதி நீக்கினார்.
இதையடுத்து 2 வார இடைவெளிக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ். பாலுமகேந்திராவின்படத்திற்காக இன்று அல்லது நாளை தனுஷ் கொடைக்கானல் செல்வார் என்று அவரது வீட்டினர் தெரிவித்தனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications