நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்க எங்களுக்குத் தெரியாதா?
சென்னை:
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை வைக்க முதல்வர் ஜெயலலிதா முயற்சிமேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளரும், எம்.பியுமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலையை வைக்க ஆகும் செலவை ஏற்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் நடிகர்சத்யராஜ் கூறியிருந்தார்.
இந் நிலையில் சீனிவாசன் மூலம் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கவிஞர் மாணிக்கம் என்பவர்ஒரு கூட்டத்தில் பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தபால் தலை வெளியிடக் கோரிஜெயலலிதா கடிதம் எழுதியதுபோல, தமிழகத்திற்கு ரூ. 700 கோடி நிதியை ஒதுக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம்எழுதியதுபோல, எம்.ஜி.ஆருக்கு நாடாளுமன்றத்தில் சிலை அமைக்கக் கோரியும் கடிதம் எழுத வேண்டும் என்றுபேசியுள்ளார்.
ஏதோ இவருக்கு மட்டும்தான் எம்.ஜி.ஆர். மீது பற்று இருப்பது போலவும், மற்றவர்களுக்கு பற்று இல்லாததுபோலவும், தமிழக நலனை முன்னிட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.
இவர்களெல்லாம் இப்போதுதான் எம்.ஜி.ஆர் குறித்துப் பேசி வருகிறார்கள். ஆனால், கடந்த 2000மாவது ஆண்டுஆகஸ்ட் மாதம் 16ம் திே எம்.ஜி.ஆர். சிலை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற சிலை அமைப்புஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, சிலை அமைப்பதற்குரிய ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
மேலும் ஒருங்கிணைப்புக் குழுவின் குறிப்புகளுக்கு இணங்க, மாதிரி சிலை அமைக்கப்பட்டு அது குழுவின்ஒப்புதலுக்கு அனுப்பபட உள்ளதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சத்யராஜுக்கு நேரடியாக டோஸ் தராமல் கவிஞர் ஒருவருக்கு பதில் சொல்வது போல இந்த அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications