ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் வெங்கையா
சென்னை:
அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைப்பது நிச்சயமாகிவிட்டது. அத்வானியின் தொலைபேசிப் பேச்சைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு வரும் 28ம் தேதிசென்னைவருகிறார்.
அப்போது கூட்டணி, இடங்கள் பகிர்வு குறித்து இருவரும் விரிவாக பேச்சு நடத்தவுள்ளனர்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி படு ஜரூராக போய்க் கொண்டுள்ளது.
அதிமுகவின் நிலைதான் குழப்பமாக இருந்தது. பா.ஜ.கவின் நிலையோ பரிதாபமாக இருந்தது.
இந் நிலையில் நேற்று துணைப் பிரதமர் அத்வானி, ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசி முக்கியஉறுதிமொழிகள் சிலவற்றை தந்ததையடுத்து கூட்டணி அமைப்பது உறுதியானது.
இந் நிலையில் வெங்கையா நாயுடு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக நேற்று மாலை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு வெங்கையா நாயுடு பேக்ஸ் அனுப்பினார்.அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வெங்கையாவை சந்திக்க ஒப்புக் கொண்டதாக அதிமுக செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை கூட்டணி பேச வந்த பிரமோத் மகாஜனை போயஸ் கார்டனில் பல மணி நேரம் காக்க வைத்து,அனுப்பினார் ஜெயலலிதா. நாயுடுவுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications