ஜீவஜோதி விவகாரம்: அண்ணாச்சிக்கு ஆதரவாக மேலும் 2 சாட்சிகள் பல்டி
சென்னை:
ஜீவஜோதி விவகாரத்தில் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிரான வழக்கில் மேலும் 2சாட்சிகள் அவருக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளனர். இதையடுத்து ராஜகோபாலின் வழக்கறிஞரை நீதிபதிகடுமையாக கண்டித்தார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்த வழக்கில் ஜீவஜோதிக்கு மன்னார்குடி கும்பலின் பின்னணி இருப்பதாக ராஜகோபால் தரப்பு கூறுகிறது.இதையடுத்து ஜீவஜோதியின் மாமாவையே ராஜகோபால் தரப்பு பணத்தால் அடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பிரின்ஸ் சாந்தகுமாரின் அண்ணன் விக்டரே தனது சாட்சியத்தை மாற்றிச்சொல்லி ஜீவஜோதி தரப்பை கலங்கடித்தார். ஏற்கனவே கூறிய வாக்குமூலத்தை மாற்றி, கொடைக்கானலில்கண்டுபிடிக்கப்பட்டது தனது தம்பியின் உடல் தானா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்றுகூறினார்.
ராஜகோபாலுக்கு எதிரான முக்கிய சாட்சிகளில் ஒருவரான விக்டர் இவ்வாறு சாட்சியம் அளித்தது வழக்கில் பெரும்திருப்புமுனையாக கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 2 சாட்சிகள் பல்டி அடித்தனர்.
கொடைக்கானலைச் சேர்ந்த மணிகண்டன், திருநெல்வேலியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆகிய இரு அரசுத் தரப்புசாட்சிகளும் ஏற்கனவே கூறிய வாக்குமூலத்திற்கு மாறாக இன்று சாட்சியம் அளித்தனர். இதனால் நீதிமன்றத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்களது சாட்சியத்தைக் கேட்ட நீதிபதி செல்வகுமார், இரு சாட்சிகளும் ஏற்கனவே போலீஸாரிடம் அளித்தவாக்குமூலத்திற்கு மாறாக சாட்சியம் அளித்துள்ளனர். இதன்மூலம் குற்றவாளியின் (ராஜகோபால்) தரப்பிலிருந்துசாட்சிகளை கலைக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சாட்சிகள் மாற்றிக் கூறுவதற்குகுற்றவாளியின் தரப்பு வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கண்டிப்புடன் கூறினார்.
மேலும் 2 அரசுத் தரப்பு சாட்சிகள் நாளை விசாரிக்கப்படவுள்ளனர். அவர்களும் பல்டி அடிப்பார்களா, வழக்கின்திசையே ஒட்டுமொத்தமாக அண்ணாச்சிக்கு ஆதரவாக மாறுமா என்பது நாளை தெரியவரும்.












Click it and Unblock the Notifications