கள்ளக் காதலன் உதவியுடன் மாமனாரைக் கொன்ற மருமகள், கணவன் கைது
திருப்பூர்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவன அதிபர் மர்மமான முறையில் இறந்த வழக்கில்அவரது மகனும், மருமகளும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து அவரை விஷம் ஊசிபோட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்கு ராஜேஸ்வரியின் கள்ளக் காதலன் உடந்தையாக இருந்துள்ளார்.
பெருமாள் கவுண்டர் என்ற அந்த பனியன் ஆலை அதிபர் கடந்த 2002ம் ஆண்டில் இறந்தார். ஆனால், அவர்மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மகன் குப்புசாமியும், மருமகள் ராஜேஸ்வரியும் (வயது 32) கூறினர்.
ஆனால், அவரை குப்புசாமி, ராஜேஸ்வரி, பிரபு, உதயகுமார் ஆகிய நால்வரும் சேர்ந்து தான் கொலைசெய்துள்ளனர். சமீபத்தில் போலீசாரிடம் சரணடைந்த பிரபு வழங்கிய தகவல்களின்பேரில் தான் இது கொலைஎன்பதும், கொலைக்கு மருமகளே முக்கிய காரணமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
குப்புசாமியின் நண்பரான பிரபு அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். அப்போது ராஜேல்வரிக்கும்பிரபுவுக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டுளளது. இந் நிலையில் பிரபுவுடன் சேர்ந்து ஏதாவது தொழில் தொடங்குமாறுதனது கணவர் குப்புசாமியிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார். அதற்கு மாமனார் பெருமாளிடம் பணம் கேட்குமாறும்யோசனை கூறியுள்ளார்.
ஆனால், பணம் தர பெருமாள் மறுத்துவிட்டார். இந் நிலையில் ராஜேஸ்வரி- பிரபு கள்ளக் காதல் உடலுறவு வரைவளர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந் நிலையில் பணம் தர மறுக்கும் தந்தை பெருமாளைக் கொலை செய்ய குப்புசாமியும் ராஜேஸ்வரியும் முடிவுசெய்து அதை பிரபுவிடம் கூறியுள்ளனர். கொலை செய்துவிட்டால் லட்சக்கணக்கான பணம் நம் கைக்குவந்துவிடும், அதன் பின் கொலைக்குக் கூலியாக பிரபுவுக்கு ரூ. 2 லட்சத்தைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம், கராத்தே மாஸ்டர் உதயகுமார் ஆகிய தனது நண்பர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு கொலைத் திட்டத்தில் இறங்கியுள்ளார் பிரபு. கொலைத் திட்டம் வெற்றி பெற்றால் பிரபுவுக்கு ரூ. 1 லட்சம்,சுப்பிரமணியத்துக்கு ரூ. 1 லட்சம், உதயகுமாருக்கு ஒரு பைக் என பேரம் பேசப்பட்டது.
இதையடுத்து இந்த முவரும் வெறிநாய்க்கடிக்கான மருந்து பாட்டில்களை வாங்கி வந்து அதனுடன் வேறுமருந்தையும் கலந்து அதை விஷமாக்கியுள்ளனர். மருந்தை டெஸ்ட் செய்ய ஒரு பறவைக்கு ஊசியைப் போட அதுஅடுத்த நிமிடமே துடிதுடித்து இறந்துள்ளது.
பின்னர் இரவில் பெருமாள் கவுண்டர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது அறைக்குள் புகுந்து, அவரை வாயைப்பொத்தி, கை, கால்களைக் கட்டிப்போட்டு இடுப்பு மற்றும் கைகளில் அந்த ஊசியை போட்டுள்ளனர். சிறிதுநேரத்தில் அவர் இறந்தார்.
இதையடுத்து மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தகவல் பரப்பிய மகன் குப்புசாமியும், மருமகள்ராஜேஸ்வரியும், பெருமாளின் உடலை தகனம் செய்துள்ளனர்.
இதையடுத்து உறுதியளித்தபடி பிரபுவுக்கும், சுப்பிரமணியத்துக்கும் தலா ரூ. 1 லட்சத்தை குப்புசாமி தந்துள்ளார்.ஆனால், உதயகுமாருக்கு பைக் வாங்கித் தரவில்லை. இதனால் அவர் கொலையை வெளியில் சொல்லப் போவதாகபிரபுவை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
அதே போல சுப்பிரமணியமும் மேலும் ரூ. 1 லட்சம் கேட்டு பிரபுவை மிரட்டியுள்ளார்.
இதனால் மிரண்டு போன பிரபு கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்து முழு விவரத்தையும் கூற, அவரைஅதிகாரி போலீசாரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications