8 மதிமுகவினரின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
டெல்லி:
மதிமுகவினர் 8 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் சிறையில் இருந்த இந்த 8 பேருக்கும்கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.பொடா சடத்தின் 21வது பிரிவின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப்பேசுவதும், பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்வதும் குற்றம் என இந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளாமல் ஜாமீன் கொடுத்துள்ளதாகவும், வெளியேவந்துவிட்ட இவர்கள் சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாமீன் கோரி வைகோ தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்குபொடா சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது. நேற்று இந்த நீதிமன்றத்தில் சுமார் 1 மணி நேரம் தனக்காகவைகோ வாதாடினார்.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வாதாட, அட்வேகட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் வரும் 27ம் தேதி தான்நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வைகோவின் மனு மீதான விசாரணை 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் வைகோஉள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு விசாரணை நாளை (இன்று) தொடர்ந்து நடக்கும் எனவும்நீதிபதி அறிவித்தார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications