அன்புமணிக்கு செங்கல்பட்டு? ஏ.கே.மூர்த்திக்கு "அல்வா"?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணியை செங்கல்பட்டு நாடாளுமன்றத்தொகுதியில் நிறுத்த அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. அத் தொகுதியின் தற்போதைய எம்.பியான ஏ.கே.மூர்த்திக்குவேறு சீட் ஒதுக்கப்படலாம் அல்லது மொத்தமாக அவர் கழற்றி விடப்படலாம் என்று பாமக வட்டாரங்கள்கூறுகின்றன.

இம் முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்இருந்தது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், வந்தவாசி, சிதம்பரம், தர்மபுரி, ராசிபுரம், மயிலாடுதுறை,பாண்டிச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

தற்போது இந்தத் தொகுதிகள் தவிர திண்டிவனத்தையும் கேட்டு வருகிறது. ஆனாலும், 6 சீட் தான் என்பதில்கருணாநிதி உறுதியாக உள்ளார். இது தொடர்பாக இரு நாட்களுக்கு முன் கருணாநிதியுடன் ராமதாஸ் நடத்தியஅரை மணி நேர பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.

6 சீட் தர்றோம் டாக்டர், கூட்டணியில இருக்குற நாங்களும் போட்டி போடனுமில்லே என்று கருணாநிதி சொல்லிஅனுப்பிவிட்டார்.

இந் நிலையில், செங்கல்பட்டு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவிவகித்த ஏ.கே.மூர்த்திக்கு இந்த முறை அந்தத் தொகுதி கிடைக்காது என்றே கூறப்படுகிறது. அத் தொகுதியில்ராமதாஸின் மகன் அன்புமணியை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே மிக நன்றாக செயல்பட்டு, தமிழக மக்கள்மற்றும் பிரதமர் வாஜ்பாயின் முழு அன்புக்கு பாத்திரமானவர் ஏ.கே. மூர்த்தி. 50 வருட சுதந்திர இந்திய வரலாற்றில்மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்துக்கு இவ்வளவு ரயில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதே இல்லை.

எழுத்துக் கூட்டியே தமிழ் வாசிக்கத் தெரிந்த மூர்த்தி, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு ரயில் திட்டத்துக்கு அடிக்கல், புதிய ரயிலுக்கு பச்சைக் கொடி,அல்லது சர்ப்ரைஸ் விசிட் அடித்து குறைகளை நிவர்த்தி செய்வது என்று மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார்.

அத்தோடு தனது செங்கல்பட்டு தொகுதிக்கு ரயில்கள் மட்டுமின்றி, ஏகப்பட்ட திட்டங்களையும் கொண்டுவந்துள்ளார். பிரதமரிடம் தனக்கிருந்த நெருக்கம் காரணமாக, அவர் கேட்டது எல்லாம் கிடைத்து.

ஆனால், இந்த ஆர்வத்தை அவர் கட்சியில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. தனது வளத்தை அதிகரித்துக்கொண்ட மூர்த்தி, கட்சிக்கு நிதி தருவதில் சுணக்கம் காட்டியதாகவும் இதனால் ராமதாசுக்கும் அவருக்கும் பலமுறைமோதல் நடந்ததாகவும் பேச்சு உண்டு.

இதையடுத்து மூர்த்தியை மாற்றிவிட்டு வேறொருவரை அமைச்சராக்க பிரதமரிடம் ராமதாஸ் பேசியபோது, அதைவாஜ்பாய் ஏற்க மறுத்துவிட்டார். கடைசியில் ராஜினாமா செய்தபோது கூட, என் அடுத்த மந்திரி சபையிலும் நீமீண்டும் அமைச்சராகனும் என்று மூர்த்தியிடம் வாஜ்பாய் அர்த்தத்துடன் கூற கண்கலங்கிவிட்டு வெளியேவந்திருக்கிறார்.

தன்னையும் மீறி வளர்ந்துவிட்ட தொண்டன் மூர்த்தியை ட்ரிம் செய்ய ராமதாஸ் முடிவு செய்துவிட்டதாகத்தெரிகிறது. இதையடுத்து மூர்த்தியின் செங்கல்பட்டு தொகுதியை அன்புமணிக்குக் கொடுத்துவிடுவது என்றுமுடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், மூர்த்தியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று தெரியாததால் அவரை எப்படிக் கையாள்வதுஎன்பதிலும் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

அமைச்சராக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதாவுடனும் நல்லுறவை பேணி வந்தவர் மூர்த்தி. இதனால், அவரைபா.ஜ.கவினர் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால், அவருக்கு தென் சென்னையைக் கூட அதிமுக கொடுத்து உதவும்என்று பேச்சு நிலவுகிறது. மூர்த்தியை மொத்தமாக ஓரம் கட்டுவது தங்களுக்கே எதிராகப் போய்விடும் என்ற பயமும்பா.ம.கவில் நிலவுகிறது.

ஆனால், ராமதாசுக்கு நான் என்றும் துரோகம் செய்ய மாட்டேன் என்று கட்சியினரிடம் கையில் அடித்து சத்தியம்செய்து வருகிறார் மூர்த்தி. அமைச்சராக இருந்ததால் செல்வத்துக்கு குறைவில்லை என்பதால், சில தொகுதிகளின்தேர்தல் செலவுகளை அவர் தலையில் மொத்தமாகக் கட்டிவிட்டு, ஒரு தொகுதியை அவருக்குத் தந்துவிடுவது என்றகாம்ரமைஸ் பார்முலாவுக்கு பா.ம.க. வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், தனக்கு செங்கல்பட்டு தான் வேண்டும் என்று மூர்த்தி முரண்டு பிடிக்கவும் வாய்ப்புண்டு. கடந்த முறைபாமக வேட்பாளராகவே நின்ற அவர், இம்முறை சுயேச்சையாக நின்றால் கூட செங்கல்பட்டில் மிக எளிதாகஜெயித்துவிடுவார் என்ற அளவுக்கு நிலைமை தலைகீழாகியுள்ளது.

இறுதியில் மூர்த்தியை ஒடுக்க முடியாவிட்டால், அன்புமணியை திண்டிவனத்துக்கு ராமதாஸ் மாற்றக் கூடும்என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+