குமரி மாவட்ட ஆசிரியர் டிஸ்மிஸ் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
எஸ்மா சட்டத்தின்கீழ், குமரி மாவட்ட ஆசியரியர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து 3 நீதிபதிகள் குழு பிறப்பித்தஉத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
3 நீதிபதிகள் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் செயிண்ட் மேரி பள்ளியில்பணியாற்றும் ஆசிரியர் விஜயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் நான் கலந்து கொள்ளவில்லை. மறுநாள் நான் பள்ளிக்குச் செல்லும்போது, போலீஸார் என்னைக் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். எஸ்மா சட்டத்தின் கீழ் என்னை டிஸ்மிஸ் செய்தது தமிழகஅரசு.
அதை எதிர்த்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தேன். எஸ்மா சட்டம் அரசு ஊழியர்களுக்குத்தான்செல்லும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.அதை ஏற்று மாவட்ட கல்வி அதிகாரி என்னை பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார்.
இந் நிலையில் 3 நீதிபதிகள் குழு விசாரணையில் கலந்து கொள்ள எனக்கு சம்மன் வந்தது. அதன்படி விசாரணையில்கலந்து கொண்டு, எனது விளக்கத்தைக் கூறினேன். ஆனால் அதை ஏற்காமல் என்னை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்மா சட்டம் பொருந்தாது என்ற அடிப்படையில், இந்த உத்தரவைரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ்பாண்டியன், மனுதாரரின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து,இது குறித்து தனது விளக்கத்தை அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications