அத்வானியிடம் ஜெ. காவிரி நீர் குறித்து பேசாதது ஏன்?: ராமதாஸ்
திண்டிவனம்:
பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள ஜெயலலிதா, கர்நாடகத்தில் இருந்து காவிரிநீரைப் பெற்றுத் தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காதது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே தனது பண்ணை வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
அத்வானியுடன் ஜெயலலிதா தொலைபேசியில் பேசியதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, ரூ.50 கோடிக்கு அதிகமான கட்டடங்களைக் கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் என்று டி.ஆர். பாலு விதித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனைவிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழகத்தின் நலன் ஏதுமில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட கோரிக்கை இது.
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகத்தை வற்புறுத்துங்கள் என்று அத்வானியிடம் பேசியிருக்க வேண்டியதுதானே?. துணைப் பிரதமரே வலிய வந்து பேசியபோது, காவிர்நீர் திறந்து விட்டால்தான் உங்களுடன் பேச்சு மற்றும்அரசியல் உறவு என்று ஏன் சொல்லவில்லை? என்றார்.
நீதிபதிகள் நியமனம்: கலாமுக்கு கோரிக்கை
மேலும் தமிழக உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் முறை குறித்தும் ராமதாஸ் பேசினார். அவரதுபேச்சின் முழு விவரம்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது 9 இடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப தலைமை நீதிபதி, குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப் பட்டியலில், குறிப்பிட்ட ஒரு முற்பட்ட வகுப்பை (பிராமண) சேர்ந்த 3நீதிபதிகளின் பெயர்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிர்ச்சி தருகிறது.
அதே வகுப்பைச் சேர்ந்த 5 நீதிபதிகள் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளனர். இந் நிலையில் மேலும்3 பேரை சேர்த்தால் அவர்களது பெரும்பான்மை உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்டு விடும். இது நீதித்துறையின்நம்பகத்தன்மைக்கே இது களங்கத்தை ஏற்படுத்தி விடும்.
மேலும் இது சமூக நீதிக்கும் முரணானது. நாட்டில் ஜனத் தொகையில் 90 சதவீதம் உள்ளபெரும்பான்மையானவர்களுக்கு, அவர்களுக்கு தகுதி இருந்தும் கூட நீதிபதி பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம்தரப்படவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு போதுமான முன்னுரிமைகொடுக்க வேண்டும் என்று தேசிய அரசியல் சட்ட சீரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. இது உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கும் பொருந்தும் என்றும் அது கூறியுள்ளது.
அப்படியுள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில்முன்னுரிமை கொடுப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். நீதிபதிகள் பட்டியல் தற்போதுகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான பட்டியலை அப்துல் கலாம்நிராகரித்து விட வேண்டுகிறோம் என்றார் அவர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications