தமிழகத்தின் ஆட்சேபணைகளை நிராகரித்தது பொடா ஆய்வுக் குழு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை, பொடாமறுஆய்வுக் குழு விசாரிப்பதற்கு தமிழக அரசு தெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை அந்தக் குழு இன்றுநிராகரித்தது.
நீதிபதி சஹாரியா தலைமையிலான 3 பேர் கொண்ட பொடா மறுஆய்வுக் குழு இன்று கூடியது. அப்போது,நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை பொடா குழு விசாரிக்க முடியாது என தமிழக அரசுதெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை நிராகரிப்பதாக நீதிபதி சஹாரியா அறிவித்தார்.
மேலும், பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகார்களுக்கு விளக்கமளிக்க தமிழகஅரசுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது, ஆனால் அரசுதான் அதற்கு சரியான பதிலை பதிவுசெய்யவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
வைகோ மற்றும் கோபால் மீதான பொடா வழக்குகள் குறித்து அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் விசாரணைநடத்தப்படும். தேவைப்பட்டால் 6ம் தேதியும் விசாரணை நீட்டிக்கப்படும் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில், பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதானவிசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications