பா.ம.கவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக: மதிமுகவுக்கு 4?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ராஜ்யசபாத் தொகுதி ஒன்றும்அக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என திமுக உறுதியளித்துள்ளது.

இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார். அவருடன்கட்சித்தலைவர் ஜி.கே.மணியும் உடனிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பா.ம.கவுக்கு தர்மபுரி, பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, சிதம்பரம், திண்டிவனம், வேலூர்அல்லது அரக்கோணம் ஆகிய தொகுதிகள் ஒதுக்க கருணாநிதி ஒப்புக் கொண்டார்.

இதில் திண்டிவனம் தொகுதி மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற இடம்என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பாண்டிச்சேரியை காங்கிரஸ் கட்சி பெரிதும் எதிர்பார்த்து வந்தது என்பதும்குறிப்பிடத்தக்கது.

இந்த 6 தொகுதிகள் தவிர மாநிலங்களவையில் எம்.பி. பதவிக்கு காலியிடம் ஏற்படும்போது, பா.ம.கவுக்கு ஒருஇடம் ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கடைசியில் இணைந்த கட்சி பா.ம.கதான். ஆனால், தொகுதி உடன்பாடுஏற்படுத்திக் கொண்ட முதல் கட்சியும் அதுவே.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

காங்கிரசுக்கு எந்தெந்த இடங்கள் தருவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் உள்படமற்ற கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். இந்த மாதத்துக்குள்ளேயே அந்தப் பணிமுடிந்துவிடுமா என்றெல்லாம் சொல்ல முடியாது.

தங்களுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.கவுக்கு அதிமுக சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக சொல்கிறார்கள். அதுகுறித்து தேர்தல் கமிஷன் தான் கண்காணிக்க வேண்டும் என்றார்.

பா.ம.கவிடம் திண்டிவனத்தை இழந்துவிட்ட மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன் வேறு ஒரு வன்னியர் பெல்ட்தொகுதியில் தான் போட்டியிட்டாக வேண்டும். வேலூர் அல்லது அரக்கோணத்தில் ஒன்றை எடுத்துக் கொண்டுஇன்னொரு தொகுதியை பா.ம.க விட்டுத் தந்தாக வேண்டும். அப்படி அக் கட்சி விட்டுத் தரும் தொகுதியில் செஞ்சிராமச்சந்திரன் போட்டியிடக் கூடும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக செங்கல்பட்டு, வேலூர்,வந்தவாசி, சிதம்பரம், தர்மபுரி, ராசிபுரம், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிட்டுசெங்கல்பட்டு, சிதம்பரம், தர்மபுரி, வந்தவாசி, வேலூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

-மதிமுகவுக்கு 4 தொகுதிகள்:

இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தேர்தல் குழு இன்று மாலை திமுகதலைவர் கருணாநிதியை சந்திக்கிறது.

தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மதிமுக 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இக்குழுவில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய மந்திரிகள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன், நாசரேத் துரை ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று மாலை கருணாநிதியைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைநடத்துகிறார்கள். மதிமுக கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

சிவகாசியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திண்டிவனத்தில் செஞ்சி ராமச்சந்திரனும்,திருச்செங்கோட்டில் கண்ணப்பனும், பொள்ளாச்சியில் டாக்டர் கிருஷ்ணனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.பழனியில் மதிமுக தோற்றது.

இம் முறையும் 5 தொகுதிகளில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், திமுக 4 தொகுதிகள் மட்டுமேதரப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+