சென்னையில் இலவச குடிநீரை காசு க்கு விற்கும் லாரி டிரைவர்கள் கும்பல்
சென்னை:
சென்னையில் இலவசமாக வினியோகம் செய்ய வேண்டிய குடிநீரை, ரூபாய்க்கு மூன்று குடம் என்ற விலையில்தண்ணீர் லாரி டிரைவர்கள் முறைகேடாக விற்று வருகிறார்கள்.
கோடை காலத்தில்தான் சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படுவது வழக்கம். இந்த வருடம் பருவமழை பொய்த்துப்போனதால், குடிநீர்ப் பற்றாக்குறை இப்போதே ஏற்பட்டுவிட்டது. குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னைபெருநகர குடிநீர் வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
1,000க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் தனியார்லாரிகள் ஒப்பந்த அடிப்டையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு லாரி தினமும் குறைந்த பட்சம் 10 நடைஇலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
ஆனால், தனியார் லாரி டிரைவர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு குடிநீரைவிற்று வருகின்றனர். 3 குடம் தண்ணீருக்கு 1 ரூபாயும், அதற்கு மேல் தண்ணீர் வேண்டுமென்றால் 2 குடத்துக்கு 1ரூபாயும் வசூலிக்கின்றனர்.
இத்தகைய குடிநீர் விற்பனை அமைந்தகரை, ஷெனாய் நகர், சூளை, மேற்கு மாம்பலம், மைலாப்பூர், மந்தைவெளிஆகிய பகுதிகளில் நடக்கிறது. இது குறித்து அந்தப் பகுதி அரசியல் பிரமுகர்களைக் கேட்டால், காசுகொடுத்தால்தான் லாரி டிரைவர்கள் ஒழுங்காக தண்ணீர் கொணடு வருவார்கள். குடிநீர் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications