மக்களவை தேர்தலில் போட்டியா? ப.சிதம்பரம் கருத்து
சேலம்:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச்செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தோம். 2 எம்.எல்.ஏ. சீட்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இரண்டிலும் நாங்கள் வெற்றி பெற்றோம்.
இந்த முறை இதுவரை எங்களை திமுக தலைவர் கருணாநிதி பேச்சுக்கு அழைக்கவில்லை. இருப்பினும் அவரைசந்திக்க நாங்கள் ஆர்வமாகவே இருக்கிறோம். இருப்பினும் மக்களவை தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆர்வம்காட்டவில்லை. 2006ம் ஆண்டு நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில்தான் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்.
சோனியா காந்தியை மீண்டும் சந்திப்பதை நிதானப்படுத்தி வைத்துள்ளேன். அவரை சந்தித்த பின்னர் மக்களவைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்.
காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் இணைவது என்ற பேச்சு இப்போதைக்கு எழவில்லை என்றார் சிதம்பரம்.
திமுக கூட்டணியிலிருந்து சிதம்பரத்திற்கு தனியாக சீட் தருவதாக முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்சிதம்பரத்திற்கு என தனியாக சீட் தர முடியாது என்று திமுக தரப்பில் கூறி விட்டதாக தெரிகிறது. அதேசமயம்,காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் சீட்களிலிருந்து ஒன்றை அவருக்குக் கொடுக்குமாறு திமுக தலைமை காங்கிரஸ்கட்சியிடம் தெரிவித்ததாகவும், அதன் காரணமாகவே தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை என்று ப.சிதம்பரம்கூறுவதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே, சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரைஅதிமுக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications