கருணாநிதியை சந்திக்க மன்மோகன் சிங், கமல்நாத் வருகை
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதியுடன்விவாதிக்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் இன்று சென்னைவருகிறார்கள்.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6 எம்.பி. சீட்கள்கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல,இந்திய தேசியலீக் கட்சிக்கும் ஒரு இடம் கொடுக்கப்படவுள்ளது. இதுதவிர மற்ற முக்கிய கட்சியானகாங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம், மதிமுகவுக்கு எத்தனை இடம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகளாக மன்மோகன் சிங், கமல்நாத் ஆகிய இருவரும் இன்று பிற்பகல்சென்னை வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியுடன் இருவரும் பேசவுள்ளனர். அப்போது தொகுதிப் பங்கீடுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று மாலையே கூட காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 13 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்,கமல்நாத் ஆகியோர் கருணாநிதியை வற்புறுத்துவார்கள் என்றும் தெரிகிறது.
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது இந்தத் தொகுதியைபா.ம.கவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இத்தொகுதியில் இதுவரை பா.ம.க. ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.கடந்த முறை போட்டியிட்டபோது படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications