தேர்தல் சலுகைகள்: ரூ.10.71 கோடியில் புதிய நீர்ப்பாசன திட்டங்களை அறிவிக்கும் ஜெ.
சென்னை:
தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 10.71 கோடி ருபாய் மதிப்பிலான 10 புதிய நீர்ப்பாசனதிட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில்,
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நீர்வளத்தைப் பெருக்க தூத்துக்குடி, தருமபுரி, மதுரை,சிவகங்கை, நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.10.71கோடி மதிப்பில் 10 புதிய நீர்ப்பாசன திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது.
மதுரை பேரையூர் வட்டத்தில் மல்லாபுரம் கிராமத்தில் ஐயனார்கோயில் ஓடையின் குறுக்கே ரூ.3.54 கோடி மதிப்பில்புதிய ஏரி அமைக்கப்படும். திருவள்ளூர் பொன்னேரி வட்டம் கொசஸ்தலை ஆற்றில் ரூ. 2.53 கோடியில் ஆற்றுப்படுகை புதுப்பிக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கப்பல்வாடி அணைக்கட்டில் ரூ.85 லட்சம் மதிப்பில் கால்வாய்கள் ஆழப்படுத்தப்படும்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே சின்னூர் அருகே ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய ஏரிஅமைக்கப்படும்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டத்திலுள்ள 18 ஏரிகளுக்கு நீர் வழங்கும் வகையில் பொதியம்பள்ளம்அணை ரூ.86 லட்சத்தில் சீரமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் தலவாரம்பூண்டி கிராமத்தில் ரூ.56 லட்சத்தில்அணை கட்டப்படும்.
சிவகங்கை தேவகோட்டையில் உள்ள சருகனி ஆற்றின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பில் அணை கட்டப்படும்.திருநெல்வேலி ராஜபதி சிற்றூர் அருகே ரூ.47 லட்சம் மதிப்பில் புதிய ஏரியும், கோவில்பட்டி துறையூர் அருகே ரூ.29 லட்சத்தில் புதிய ஏரியும் அமைக்கப்படும். இந்த திட்டங்களினால் 4462 ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications