ஜோசியர் பேச்சைக் கேட்டு 3 குழந்தைகளைக் கொன்ற தந்தை
மேட்டூர்:
ஜோசியர் சொனனதைக் கேட்டு தனது இரு மகள்களையும், ஒன்றரை வயது மகனையும் கொலை செய்த கூலித்தொழிலாளி, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
மேட்டூர் அருகே கூமூரன்காடு என்ற கிராமத்தில் இந்தக் கொடூரம் நடந்தது. குடிநீர் வடிகால் வாரியத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஈஸ்வரன். இவரது ஒன்றரை வயது மகன் தினேஷ்குமாருக்கு இருதய நோய்இருந்தது.
அதற்கு மருத்துவமனையில் போய் சிகிச்சை தராமல் நாட்டு வைத்தியர், கோவிலில் போய் மந்திரிப்பது என்றுநாட்களைக் கடத்தி வந்தார். இந் நிலையில் ஒரு ஜோசியரையும் பார்த்து தனது நிலையை விளக்க, அடுத்த நான்குவருடங்களுக்கு உனது குடும்பத்துக்கே மிகவும் கெட்ட நேரம் தான் என்று அந்த ஜோசியர் கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் இரு வாரங்களில் உனது மகனும் இறந்துவிடுவான் என்று கூறவே, இடிந்து போன ஈஸ்வரன்குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு தனது 3, 5 வயதான மகள்களுக்கு விஷம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து மகன்தினேஷ்குமாருக்கும் விஷம் தந்தார். பின்னர் தனது மனைவி விஜயாவுக்கும் விஷத்தைத் தந்துவிட்டு தானும்அருந்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளும் வாயில் நுரை தள்ளி உயிரிழந்துள்ளனர். ஆனால், ஈஸ்வரனும், விஜயாவும்அலறித் துடிக்கவே அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இப்போது இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈஸ்வரன் மீது போலீசார் கொலை வழக்குகளும்,தற்கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications