புதுவை தொடர்பாக திமுக-காங். உடன்பாட்டில் இழுபறி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸும், பா.ம.கவுக்குக்கொடுத்ததை திரும்பி வாங்கித் தர முடியாது என்று திமுகவும் கூறி வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையேதொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள் பா.ம.கவுக்கு 6 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதில் பாண்டிச்சேரியும் ஒன்று. இதனால் காங்கிரஸ் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

காலம் காலமாக பாண்டிச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவது காங்கிரஸ் கட்சிதான். கடந்த முறைஇந்தத் தொகுதியில் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் பரூக் மரைக்காயர் போட்டியிட்டு வென்றார்.அவர்மீண்டும் இத் தொகுதியைக் கேட்கிறார்.

இந் நிலையில், அத்தொகுதியை பா.ம.கவுக்கு திமுக ஒதுக்கி இருப்பது பாண்டிச்சேரி மற்றும் தமிழக காங்கிரஸ்தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப்பொறுத்தவரை திமுகவுடனான நல்லுறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்.

இந் நிலையில் நேற்று கட்சியின் மேலிடப் பிரதிநிதிகள் மன்மோகன் சிங், கமல்நாத் ஆகிய இருவரும் சென்னைவந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தரப்பினரும்சுமார் 1 மணி நேரம் விவாதித்தனர்.

அப்போது பாண்டிச்சேரி குறித்து பேச்சு எழுந்ததாகவும், ஆனால் தனது நிலையை கருணாநிதி திட்டவட்டமாகவிளக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. தங்களிடம் கலந்து பேசாமல் புதுவையை பா.ம.கவுக்கு திமுகஒதுக்கியிருப்பது பாண்டி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை கண்டிப்பாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர்நாராயணசாமியும் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் மன்மோகன்சிங், கமல்நாத் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார். அவருடன் பாண்டிச்சேரி முதல்வர்ரங்கசாமியும் வந்திருந்தார்.

நாராயணசாமி கூறுகையில் எங்களது கருத்துக்களைக் கேட்காமல் இத்தொகுதி பா.ம.கவுக்குகொடுக்கப்பட்டுள்ளது. , பாண்டிச்சேரி தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை.இதை எங்கள் கட்சி மேலிடத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

திமுகவுடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவோம். பா.ம.கவுக்கு இத்தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டதுஎன்பதை மனதில் கொள்ளாமல் திமுக தலைமையுடன் பேசுவோம் என்றார்.

பாண்டிச்சேரியில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி, பரூக் மரைக்காயர், கண்ணன் ஆகியோரின் ஆதரவாளர்கள்கடுமையாக போட்டி போட்டு வருவதால், அத் தொகுதியை வேறு கட்சிக்கு தந்துவிடுமாறு காங்கிரஸ் தலைமைதான் திமுகவைக் கேட்டுக் கொண்டதாக முன்னதாக செய்திகள் வந்தன.

இந் நிலையில் புதுவை காங்கிரசார் இதில் கடும் கோபமடைந்துள்ளதால், மீண்டும் அத் தொகுதியை திமுகவிடம்பேசி, வாங்குவதில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தொகுதியைப் பெற்றுவிட்டபா.ம.கவிடமே நேரடியாகப் பேசி அந்தத் தொகுதியை வாங்கும் முயற்சிகளிலும் சில காங்கிரஸ் தலைவர்கள்ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக- காங்கிரஸ்இடையே மேலும் பிரச்சனைகள் வரலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+