5 தொகுதிகள் கேட்கும் மதிமுக: கருணாநிதியுடன் நாளை மீண்டும் பேச்சு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக தலைவர்கள் நாளை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைநடத்த உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகாசி, பழனி, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, திண்டிவனம் ஆகிய 5தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த முறையும் 5 தொகுதிகள் வேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது. ஆனால் 4 தொகுதிகள்தான் தர முடியும்என்று திமுக கூறுவதாகத் தெரிகிறது. இதனால் சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
எப்படியும் இறுதியில் கூடுதலாக ஒரு தொகுதியை திமுக ஒதுக்கும் என்று மதிமுக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த முறை மதிமுக போட்டியிட்ட திண்டிவனம் தொகுதி இப்போது பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக கடலூர் அல்லது வந்தவாசி தொகுதியை மதிமுக கோருகிறது.
தொகுதிகள் குறித்து முடிவு செய்யும் பொருட்டு மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் நாளை வேலூர் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்து ஆலோசனைசெய்கிறார்கள்.
அப்போது எடுக்கப்படும் முடிவுகளையொட்டி, நாளை மாலை கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.எப்படியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஒரிரு தினங்களில் கையெழுத்து ஆகிவிடும் என்று மதிமுக தரப்பில்கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications