ஸ்ரீரங்கம் தீவிபத்து: 4 பேர் கைது
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் தீவிபத்து தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீரங்கம் பத்மபிரியா கல்யாண மண்டபத்தில் நடந்த கோர தீவிபத்தில் மாப்பிள்ளை குருராஜன் உள்ளிட்ட 57பேர் பரிதாபமாக கருகி இறந்தனர். மணப் பெண் ஜெயஸ்ரீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.தீவிபத்து நடப்பதற்கு சற்று முன்பு வரை எடுக்கப்பட்ட வீடியோ படங்களின் அடிப்படையில் இந்த கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திருச்சி பிராந்திய ஐ.ஜி. ஜார்ஜ் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பந்தல் காண்டிராக்டர் செல்வம், எலக்ட்ரீஷியன் முருகேசன், லைட் பாய்பாலாஜி, கல்யாண மண்டப மேலாளர் சடகோபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பந்தலுக்கு கீழே குறுக்கும், நெடுக்குமாக ஏராளமான வயர்கள் சென்றுள்ளன. இதனால் செல்வம், முருகேசனும்கைது செய்யப்பட்டனர். வீடியோ கேமராவிலிருந்து வெளியான அதிக வெப்பம் காரணமாகவே தீவிபத்துஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே பாலாஜியும், கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரசெய்யப்படாத காரணத்திற்காக சடகோபனும் கைது செய்யப்பட்டனர்.
தீவிபத்தாக பதிவான வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 30 பேரிடம் விசாரணைநடத்தியுள்ளோம். மேலும் சிலர் விரைவில் கைதாவார்கள் என்றார் ஜார்ஜ்.
பேட்டியின்போது கோர விபத்து ஏற்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை செய்தியாளர்களுக்குஜார்ஜ் போட்டுக் காட்டினார்.
சாவு எண்ணிக்கை 59 ஆக உயர்வு
இந் நிலையில், இந்த தீவிபத்தில் பலத்த காயமடைந்த திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில்மேலும் இருவர் இன்று உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications