14 கேட்கிறது காங்., 11 தான் என்கிறது திமுக!
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியையும் சேர்த்து 14 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.ஆனால் 11 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பு கூறியுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. பாண்டிச்சேரி உள்பட 14தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் பாண்டிச்சேரியைத் தர முடியாது, 11 தொகுதிகள்தான்ஒதுக்க முடியும் என்று திமுக கூறி வருகிறது.
காலம் காலமாக பாண்டிச்சேரியில் போட்டியிட்டு வந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல், எந்தவித வெற்றிவாய்ப்பும் இல்லாத நிலையில், கட்சிக்கு அடிப்படை பலமே இல்லாத நிலையில் பா.ம.க. எப்படி இந்தத் தொகுதியில்போட்டியிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு தென்காசி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகர்கோவில், திருச்செந்தூர்,ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, வந்தவாசி, நீலகிரி, திருச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க திமுகமுன்வந்துள்ளது.
ஆனால் கூடுதலாக ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, பாண்டிச்சேரி ஆகிய 3 தொகுதிகளைக் கேட்கிறது காங்கிரஸ்.ஆனால் இவற்றைத் தர முடியாத நிலையில் இருப்பதாக திமுக கூறுகிறது. இதனால் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே, கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர்நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் தோல்விதான் எங்களுக்கு முக்கியம். எனவே சிறு சிறுபிரச்சினைகளை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை. கடைசி வரை நம்பிக்கையுடன் இருப்போம் என்றுகாங்கிரஸ் தரப்பு கூறுகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications