ஏப்.13 முதல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை: தலைமை நீதிபதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏப்ரல் 13ம் தேதி முதல் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை செயல்படத் தொடங்கும் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.

தனது வீட்டில் செய்தியாளர்களிடம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பேசுகையில்,ஏப்ரல் 13ம் தேதி மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற நிரந்தரக் கிளை தொடங்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.காரே கிளையைத் திறந்து வைக்கிறார். முதல்வர் ஜெயலலிதா இந் நிகழ்ச்சியில்கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.

தொடக்கத்தில் 5 நீதிபதிகளுடன் கிளை இயங்கத் தொடங்கும். மொத்தம் 14 மாவட்டங்களை இந்தக் கிளைஎல்லையாக கொண்டிருக்கும். இருப்பினும் ரிட் மனுக்களை விசாரிப்பது தொடர்பான எல்லை இன்னும்வரையறை செய்யப்படவில்லை.

மொத்தம் 14 நீதிபதிகள் இந்தக் கிளைக்கு நியமிக்கப்படுவர். அதற்கான ஒப்புதல் சில ஆண்டுகளுக்கு முன்பேசென்னை உயர் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.இதுதவிர 2 பதிவாளர்கள், கூடுதல் பணியாளர்களையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சில நீதிபதிகளை மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும், சுழற்சிமுறையில் அவர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் யோசிக்கப்படும்.

மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் நீதி தேவதை, திருவள்ளுவர், மகாத்மா காந்தி ஆகியோரது சிலைகள்வைக்கப்படும்.

நாட்டிலேயே அதிகபட்ச அளவாக, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் 3 லட்சம் வழக்குகளை விசாரித்துதீர்ப்பு கூறி சாதனை படைத்துள்ளது என்றார் சுபாஷன் ரெட்டி.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் தற்காலிகமாக அமைக்க 1990ம் ஆண்டு முடிவுசெய்யப்பட்டது. பின்னர் 1995ம் ஆண்டு இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம் கொண்டு வந்தது.இதில் திருத்தம் செய்து, நிரந்தரக் கிளையை மதுரையில் அமைக்க பின்னர் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 72 ஏக்கர் பரப்பளவில் ரூ. 50 கோடி மதிப்பில் மதுரை உலகனேரியில் கட்டுமானப் பணிகள்தொடங்கின. 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணிகள் பெரும்பாலானவை முடிவடைந்த நலையில்கிளையின் தொடக்க விழா தாமதமாகி வந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அவ்வப்போது மதுரை சென்று பணிகளைஆய்வு செய்து தலைமை நீதிபதிக்கு அறிக்கை அளித்து வந்தன. கடைசியாக கடந்த மாதம் நீதிபதிகள்கோவிந்தராஜன், ஞானப்பிரகாசம், முருகேசன் ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்று ஆய்வு செய்து அறிக்கைகொடுத்தது.

அதன் அடிப்படையில் தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தொடக்க விழா ஏப்ரல் 13ம் தேதிநடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 12 நீதிமன்ற அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள்,நீதிபதிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளைஅமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+