சேலம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி தியாகி பலி
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், காளைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகி, காளை முட்டி பலியானார்.
சேலம், தம்மம்பட்டி கிராமத்தில், சில ஆண்டுகளாக, குடியரசு தினத்தன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதுவழக்கம். அதேபோல, நேற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டகாளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு காளைகளை அடக்கமுயற்சித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகியான 75 வயதுமுத்துச்சாமி என்பவர் காளை முட்டி படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் இந்த தியாகி.
குடியரசு தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி இறந்தது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications