ஸ்ரீரங்கம் தீவிபத்து: மணமகள் ஜெயஸ்ரீயை நேரில் சந்தித்து கருணாநிதி ஆறுதல்- ரூ. 2 லட்சம் உதவி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Karunanidhi lends helping hand to Jayashree

படம் நன்றி: தினகரன்
ஸ்ரீரங்கம் பத்மபிரியா திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் உள்பட 60 பேர்பலியாகினர். இந்த விபத்தில் மணமகள் ஜெயஸ்ரீ தப்பிவிட்டார்.

இருப்பினும் நடந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவர் மன அதிர்ச்சியுற்றுள்ளார். நேற்று தான் மணமகன்இறந்துபோன விஷயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் அழுது, புரண்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார்.

இதைப் பார்த்த மருத்துவமனையின் டாக்டர்களே கண்கலங்கும் நிலை ஏற்பட்டது. இப்போது கடும் மனஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு திருச்சியில் உள்ள ராயல் பெர்ல் மருத்துவமனையில் மனநல நிபுணர்கள் மூலம் ஆலோசனைகளும் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நேற்று தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 40வது மறைவு தினத்தையொட்டி திருவாரூர் சென்றதிமுக தலைவர் கருணாநிதி இன்று காலை திருச்சி வந்தார்.

ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவர் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.கருணாநிதியைப் பார்த்ததும் இரு கைகளையும் கூப்பி ஜெயஸ்ரீ கதறி அழுதார். அவரருகே இருக்கையில் அமர்ந்துதைரியமா இரும்மா, வேண்டிய உதவி செய்றோம் என்று கருணாநிதி கூறினார்.

திருமணத்துக்கு கடன் வாங்குனதா நியூஸ் வருதே. உனக்கு எவ்வளவும்மா கடன் இருக்கு என்று கருணாநிதிகேட்டார்.

அதற்கு அக்காள்கள் திருமணச் செலவுக்கு வாங்கியது, எனது கல்யாண செலவுக்கு வாங்கியது உள்பட ரூ. 1.25லட்சம் கடன் இருக்கு என ஜெயஸ்ரீ பதிலளித்தார். இதையடுத்து உதவியாளரிடம் செக் புக்கை வாங்கியகருணாநிதி, ஜெயஸ்ரீயின் இனிசியலைக் கேட்டார். அழுதவாறே எச் என அவர் பதில் சொல்ல, எச். ஜெயஸ்ரீ என்றபெயருக்கு ரூ. 2 லட்சத்துக்கு செக்கை எழுதி கையொப்பமிட்டு அவரிடம் தந்தார்.

அதை வாங்கியபோதும் ஜெயஸ்ரீ கதறி அழ, அவருக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்யுமாறு திருச்சிபகுதி திமுக நிர்வாகிகளுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.

பின்னர் ஜெயஸ்ரீயின் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை வழங்கி வரும் டாக்டர்களிடமும் கருணாநிதி விசாரித்தார்.அவருடன் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் உடன் வந்திருந்தார்.

மணப் பெண் ஜெயஸ்ரீ மிகவும் ஏழ்மையான, பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிபத்தில் மணமகனுடன், தனது தந்தை, தாய், மூத்த சகோதரி, இன்னொரு சகோதரியின் மகன் ஆகியோரையும்ஜெயஸ்ரீ இழந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+