பா.ஜ.கவில் சேருகிறார் புதுவை கண்ணன்?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ப.கண்ணன், விரைவில் பா.ஜ.கவில் சேர்ந்து புதுவைநாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று செய்தி கிளம்பியுள்ளது.
புதுவையைச் சேர்ந்த ப.கண்ணன் ஒரு காலத்தில் புதுவை பகுதி காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியாகஇருந்தவர். மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிந்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது, கண்ணனும்புதுவை காங்கிரஸிலிருந்து விலகினார்.
அதன் பின்னர் மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதுவை மக்கள் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை ஆரம்பித்தார். பின்னர் இக்கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன் பிறகு அவருக்குகாங்கிரஸில் எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.
கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களை சுதந்திரமாகசெயல்பட முதல்வர் ரங்கசாமி அனுமதிக்காமல், இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார் என்று அவரதுஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந் நிலையில் பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு திமுக விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும்புயலைக் கிளப்பியது. இருப்பினும் முக்கியத் தலைவர்களான வைத்தியலிங்கம், ரங்கசாமி உள்ளிட்டோர் இதுகுறித்து பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் சாதித்ததால் அதிருப்தி அடைந்த கண்ணன் கட்சியிலிருந்துவிலகுவதாக நிேற்று திடீரென அறிவித்தார்.
தனது விலகலுக்கு அவர் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று மட்டுமே அவர்கூறினார். ஆனால் தனக்கு பாண்டிச்சேரி தொகுதி ஒதுக்கப்படும் என்று அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்ததாகவும், புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரின் சதிகாரணமாகவே பா.ம.கவுக்கு சீட் கிடைத்தது என்று கண்ணன் நினைக்கிறார். இதன் காரணமாகவே அவர்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக புதுவையில் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையே, கண்ணன் விரைவில் பா.ஜ.கவில் சேருவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை சென்ற அகிலஇந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனை கண்ணன் சந்தித்துப் பேசினார். அதேபோல, பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரமோத் மகாஜனிடம் கண்ணனுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. அவருடனும் அடிக்கடி கண்ணன்பேசி வருகிறார்.
எனவே விரைவில் அவர் பா.ஜ.கவில் சேர்ந்து, புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது. அதேசமயம், அதிமுகவும் கண்ணனை தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.பா.ஜ.க. வேட்பாளராக கண்ணன் நின்றாலும் அவரை ஆதரிக்க அதிமுக தயார் என்றே கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications