இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: புலிகள் கடும் எதிர்ப்பு
கொழும்பு:
இந்தியாவுடன் இலங்கை அரசு செய்ய முயற்சித்து வரும் ராணுவ ஒப்பந்தம், அமைதிப் பேச்சுவார்த்தைகளைகடுமையாகப் பாதிக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தார். அப்போது பிரதமர்வாஜ்பாயும், ரணிலும் ராணுவரீதியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் பொருட்டு, ஒப்பந்தம் செய்துகொள்ளவும் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொண்டனர்.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் விற்பனை செய்யும். இலங்கைவீரர்களுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய ஒப்பந்தம் ஏற்படுவதை அண்டன்பாலசிங்கம் கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தை போர் நிறுத்தஉடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந் நிலையில், இலங்கை ராணுவத்துக்கு இந்தியாஆயுதங்கள் வழங்கினால், அது ராணுவ பலத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் சமச்சீரற்றநிலையை உருவாக்கும்.
இது சிறுபான்மை இனத்தவரான தமிழர்களின் மீதான சிங்கள அரசின் அராஜகப் போக்கை அதிகரிக்கச்செய்வதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைத்து விடும்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இப்போதைய சூழ்நிலையில்,இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டிய தேவையே இல்லை என்றார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications