குமரி அருகே மாணவனை பீரோவில் வைத்துப் பூட்டிய வாத்தியார்!
திருவட்டார்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பரதப்பள்ளி கிராமத்தில், மாணவனை பீரோவில் வைத்துப்பூட்டிய ஆசிரியரை எதிர்த்து அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
திருவட்டார் அருகே உள்ள பூவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஜெரின் (வயது 6)பரதப்பள்ளி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதலாவது வகுப்பில் படித்து வருகிறான்.
கடந்த 23ம் தேதி தனது வகுப்பில் படிக்கும் சிறுமியிடமிருந்து பென்சிலை எடுத்துள்ளான் ஜெரின். இது குறித்துஅந்த சிறுமி, ஆசிரியர் முத்தையன் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளாள். இதையடுத்து மாணவன் ஜெரினைக்கண்டித்த ஆசிரியர் முத்தையன், அவனை, பீரோவில் வைத்து பூட்டியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து பீரோவைத் திறந்தபோது, மாணவன் மயக்கமாகிக் கிடந்தான். பின்னர் அவனுக்குமயக்கம் தெளிவித்து வீட்டுக்கு அனுப்பினார் முத்தையன்.
வீட்டுக்கு வந்த ஜெரின் தனது பெற்றோரிடம் நடந்ததை அழுது கொண்டே கூறினான். அதிர்ச்சியடைந்தபெற்றோர், கிராமத்தாரிடம் விஷயத்தைக் கூறவே கிராமத்து மக்கள் கொந்தளித்தனர்.
குடியரசு தினமான நேற்று பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஜெரினின் பெற்றோர்கள்மற்றும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து ஆசிரியர் முத்தையனை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீஸார் விரைந்து வந்து ஆசிரியரை மீட்டு கிராமத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications