தனித்து போட்டியிட விடுதலை சிறுத்தைகள் முடிவு
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தலித் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளைகூட்டணியிலிருந்து கழற்றி விட்டுள்ளது திமுக.
இதையடுத்து இரு கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தங்களுக்குள் ஆலோசித்து வருகின்றன.இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம்பேசுகையில், பா.ம.கவின் மிரட்டல் அரசியலுக்கு திமுக பலியாகி விட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகத்தை நிராகரித்ததன் மூலம் ஒட்டுமொத்த தலித் மக்களையே திமுகஅவமானப்படுத்தி விட்டது. இப்போதைக்கு எங்கள் முன் இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, பா.ஜ.க.-அதிமுக கூட்டணி அமையாவிட்டால் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது. அல்லது, காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்தால் அதில் இணைந்து போட்டியிடுவது. ஆனால் இவை இரண்டும் அமையுமாஎன்பதை யூகிக்க முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியையும் திமுக அவமானப்படுத்தி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை.எனவே அவை திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வேண்டும்.
இரு கூட்டணி வாய்ப்புகளும் அமையாவிட்டால், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தலித் கட்சிகளுடன் இணைந்துபுதிய 3வது கூட்டணியை அமைப்போம். பிற சிறுபான்மைக் கட்சிகளையும் இந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றார்திருமாவளவன்.
திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வீர்களா என்று திருமாவளவனிடம்செய்தியாளர்கள் கேட்டபோது, மக்கள் எனக்கு வாக்களித்து கொடுத்த பதவி அது, சின்னத்திற்குக் கிடைத்த வெற்றியல்ல என்றார்அவர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications