கோபியில் போட்டியிட சுலோசனா சம்பத் விண்ணப்பம்
சென்னை:
அதிமுக சார்பில் கோபிச் செட்டிபாளையத்தில் போட்டியிட சுலோசனா சம்பத் விண்ணப்பம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல்பிப்ரவரி 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது. போட்டியிட விரும்புவர்கள் ரூ.15,000 செலுத்தி விண்ணப்பங்களைப்பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இன்று காலை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பலர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களைவாங்கினர். விண்ணப்பம் வாங்கியவர்களில் சுலோசனா சம்பத் கோபிச்செட்டிப்பாளையத்திற்கும், வழக்கறிஞர்ரவீந்திரநாத் ஜெயின் வடசென்னையிலும், குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா மத்திய சென்னையிலும்,ஆதிராஜராஜம் தென்சென்னையிலும், டாக்டர் அசோகன் ஸ்ரீபெரும்புதூரிலும்,
மோகனன் அரக்கோணத்திலும், பக்தவச்சலம் திண்டிவனத்திலும், சத்தியமூர்த்தி ராமநாதபுரத்திலும், ராஜேந்திரபாபுஎம்.எல்.ஏ மற்றும் திலக் நாகர்கோவிலிலும், தொரத்தூர் ராஜேந்திரன் மற்றும் டாக்டர் தெய்வசேதுபதி கடலூரிலும்போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவை வேலூரில் போட்டியிடக் கோரி ஜெயப்பிரகாசும், சேலத்தில் போட்டியிடக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ நடேசனும் விண்ணப்பித்துள்ளனர்.
அதிமுக ஆட்சி மன்ற குழுவில் பன்னீர்செல்வம்
அதிமுக ஆட்சி மன்றக் குழுவிலிருந்து பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்டு, அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமைதான் ஆட்சி மன்றக் குழுவை முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்திருந்தார். அப்போது,நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகனை நீக்கிவிட்டு, கருப்பசாமியை நியமித்தார்.
இப்போது, திண்டுக்கல் தொகுதி எம்.பியான சீனிவாசனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக தேர்தல் பிரிவுச்செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
ஆட்சி மன்றக் குழுவில் ஜெயலலிதா, அவைத் தலைவர் பொன்னையன், பன்னீர்செல்வம், அமைப்புச்செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், கருப்பசாமி, தேனி சையதுகான் ஆகியோர் உள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications