ஜெ.- வெங்கையா சந்திப்பு: அதிமுக-பா.ஜ.க. கூட்டணி உருவானது
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே இன்று கூட்டணி உருவானது.
இன்று முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்துப் பேசியதையடுத்து கூட்டணிஉறுதியானது.
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. போயஸ் கார்டன் வாசலில்வெங்கைய்யா நாயுடுவை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுஉள்ளே அழைத்துச் சென்றனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்பின்போது ஜெயலலிதாவின் நண்பரும், வில்லன் நடிகர் நம்பியாரின்மகனும், பா.ஜ.க. தேசியக் கவுன்சில் உறுப்பினருமான சுகுமாறன் நம்பியாரும் உடனிருந்தார்.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாயின் அரசை கவிழ்த்தார் ஜெயலலிதா. இந் நிலையில் மீண்டும்இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாகியுள்ளது.
வாஜ்பாயை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என பா.ஜ.க. அறிவித்ததால், கூட்டணி சேருவதைஜெயலலிதா ஆரம்பத்தில் தவிர்த்து வந்தார். இந் நிலையில் அவருடன் துணைப் பிரதமர் அத்வானி இரண்டு முறைதொலைபேசியில் பேசினார். பா.ஜ.க. முக்கியஸ்தர் சுகுமாறன் நம்பியாரும் ஜெயலலிதாவை சந்தித்தார்.
அப்போது ஜெயலலிதா வைத்த நிபந்தனைகளை பா.ஜ.க. தலைமையிடம் நம்பியார் தெரிவித்தார். இந்தநிபந்தனைகளை ஏற்க பா.ஜ.க. முன் வந்ததையடுத்து கூட்டணி உருவாகியுள்ளது.
இன்று ஜெயலலிதாவை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய நாயுடு, தேசிய அளவிலான அரசியல் நிலைமைகுறித்து ஜெயலலிதாவுடன் பேசவே நான் இங்கு வந்தேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.போட்டியிடும். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பதுகுறித்து அதிமுகவும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகளும் பேசி முடிவு செய்வார்கள் என்றார்.
வாஜ்பாய் பிரதமராக வருவதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். இருவரும் இணைந்து பிராச்சாரம் செய்வது பற்றிபின்னர் முடிவு செய்யப்படும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போல் ஜெயலலிதா வெளியில் இருந்துஎங்களுக்கு ஆதரவு அளிப்பார் .
எங்கள் கூட்டணிக்கு பிரதம வேட்பாளர் என்பதை தெளிவாக முன்னிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் கூட்டணிஅவ்வாறு அறிவிக்காதது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என்றார்.
நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், நாயுடுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிக திருப்திகரமாக இருந்தது.நாடாளுமன்றத் தேர்தலை பாரதீய ஜனதாக் கட்சியும், அதிமுகவும் இணைந்து சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இரு கட்சிகளின் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைநடத்தப்படும் என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேருமா என்று கேட்டபோது, அதற்கு நேரடியாக பதில் தர மறுத்தஜெயலலிதா, நான் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டேன் என்று பதிலளித்தார்.
நாயுடு கூறுகையில், இப்போது ஏற்பட்டுள்ள இந்தக் கூட்டணி எதிர்காலத்திலும் இணைந்து செயல்படும் என்றார்.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. பா.ஜ.கவுக்கு 6 அல்லது 7 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் பா.ஜ.க. 10 தொகுதிகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications