தோசையில் விஷம்: சோளிங்கரில் ஒரே குடும்பத்தில 4 பேர் தற்கொலை
சோளிங்கர்:
கடன் தொல்லை காரணமாக தோசையில் விஷம் கலந்து சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சோளிங்கர் கணபதி தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (33). இவர் ஒரு கட்டட மேஸ்திரி. இவருக்கு தேன்மொழி (29) என்ற மனைவியும், சத்யா (11) என்ற மகனும், பிரியா (6) என்ற மகளும் இருந்தனர்.
கடந்த காலத்தில் சீனிவாசனுக்கு உடல் நிலை சரியில்லாதபோது, மருத்துவ செலவுகளுக்கும், குடும்ப செலவுகளுக்கும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது இவரிடம் பணம் இல்லை. திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு வருவாயும் இல்லை.
இதனால் மனம் நொந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தோசை மாவில் விஷம் கலந்து, அதில் தோசை சுட்டு சாப்பிட்டனர். இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரை இழந்தனர். தற்செயலாக சீனிவாசனின் வீட்டிற்கு வந்த தேன்மொழியின் அக்கா மகன் ஜெகதீசன், நால்வரும் பிணமாக இருப்பதைப் பார்த்தார்.
பின்னர் சோளிங்கர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, பிணங்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications